11.09.2009 மலை 6 மணிக்கு டார்வின் 200 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டமாக -
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாம்பரம் கிளை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பேபி உயர்நிலை பள்ளியில் ஒரு அற்புதமான நிகழ்வை நடத்தினர். இவ்விழாவிற்கு
மருத்துவர் சந்திரா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி
ஆசிரியர் வெங்கடேசன் எடுத்துரைத்தார். விழாவின் அரசர்
பேராசிரியர் முனைவர் ப.தயானந்தன் அவர்கள்
"அனைதுயர்களின் பெரும் ஒருங்கிணைப்பு" பற்றி டார்வினின்பார்வையில் நழுவு பட காட்சியாக சுமார் 11/௨ மணி நேரத்திற்கும் மேல் விளக்கமளித்தார். அவரது உரை அழகிய எளிய தமிழில் அனைத்து வயது தரப்பினரையும் கவரும் விதத்திலும் , தகவல் செறிவு மிக்கதாயும் இருந்தது.
இத்தகைய பொது நிகழ்வுக்கு திட்டமிட்டு சிறப்பாக நடத்திய
திரு.தேவ பிரகாஷ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
மீண்டும் இப்பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து பொது மக்களுக்கு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அனைத்து பகுதி மக்களுக்கும் எடுத்து செல்ல திட்டமிட செய்யவும்.
தொடர்புக்கு 9840511638, 944387494
பதிவுகள்
Download As PDF
No comments:
Post a Comment