Welcome
I welcome the minds who have anything to share their views, ideas, missions, vision, goal, policies, and communal activities all round in education in India and Tamilnadu.Use this platform to have certain key note in the broader area of Education. You can post the methods and materials can be used in the Teaching and Learning process
Tuesday, October 5, 2010
மூடனின் புது நம்பிக்கை
Tuesday, March 16, 2010
ஜப்பானுக்கு ஹிரோசிமா இந்தியாவுக்கு ஜாதுகுடா
ஜாதுகுடா. ஜாது என்ற சொல்லுக்கு இந்தியில் மாயம் என்று பொருள். குடா என்றால் மலையாகத்தான் இருக்க வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாதுகுடா என்னும் அந்த மலை கிராமமும் உண்மையிலேயே மாயமலைதான். பசுமை மலைகள் அழகான வயல்கள். அருகே சின்னதும் பெரிதுமாக குடிசைகள். இயற்கையோடு இயற்கையாய் வாழுகிற மக்கள். தத்தி தத்தி மலை காடுகளினுடே ஓடி விளையாடும் பிள்ளைகள். வருடத்திற்கு நான்கு திருவிழா. அவர்களுக்கென பிரத்யேக கலைகள். உரிமையாளர்கள் இல்லாத நிலப்பரப்பு. மலையும் மலை சார்ந்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை. எல்லாமே பாஸிட்டிவ், இதுதான் ஜாதுகுடா. இப்போதல்ல. எப்போதோ..
‘’ஒரிடத்தில் நிலையாய் இருக்க விடாமல் அனுதினமும் விரட்டி அடிக்கிறாயே இறைவா இந்த அலைச்சலின் முடிவெப்போது’’ ஜார்கண்டின் பூர்வ குடிகளான ஆதிவாசிகளின் நாட்டுப்புற பாடல் இது. அதன் பின் ஒலிக்கும் சோகமான வரலாறு யாருக்கும் தெரியாது. இவர்களுக்கென தனியாக எந்த வரலாறும் எழுதப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய வரலாறெல்லாம் வழிவழியாய் பாடுகிற இந்த தெம்மாங்கு பாடல்களில்தான். எப்போதும் அதிகார வர்க்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட வரலாறு. ஒவ்வொரு முறை அகதிகளாக இடம்பெயரும் போதும் விசும்பி அழும் குழந்தைகளின் கண்ணீரால் எழுதப்பட்ட வரலாறு.
தோல் நோய்கள்,டிபி,மலட்டுத்தன்மை,புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கு கால் கைவிரல்கள் அதிகமாகவும் குறைவாகவும் இருப்பது , உடலின் ஒருபக்கம் மட்டும் வளர்ச்சி, குழந்தைகளுக்கு மூளை குறைபாடு, கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு , குழந்தைகள் இறந்து பிறப்பது, புற்றுநோய்,காச நோய், வாதம், தோல் நோய்கள், புற்றுநோய் இன்னும் இன்னும் ஏராளமான அறியப்படாத நோய்கள். இத்தனை நோய்களும் ஹிரோசிமா-நாகசாகியில் அணுகுண்டு வெடித்த பின் அதில் தப்பிப் பிழைத்த மக்களுக்கு ஏற்பட்ட பின்விளைவுகள். ஜப்பானுக்கு ஹிரோசிமா இந்தியாவுக்கு ஜாதுகுடா. ஆனால் அங்கு யாரும் இதுவரை அணுகுண்டு வீசியிருக்கவில்லை.
‘அட நீங்க வேறங்க , அந்த ஊர்க்காரங்க கிட்ட குடிப்பழக்கம் ஜாஸ்தியாகிருச்சு , அப்புறம் ரொம்ப அசுத்தமான இடங்கள்ல வாழ்றாங்க, அப்புறம் வியாதி வராம என்ன பண்ணும் , ஆ ஊனா எங்களையே குத்தம் சொல்றதே இந்த மக்களுக்கு பொழப்பா போச்சுங்க’’ அரசு தரப்பிலிருந்து வந்த பதில் இது. அரசுக்கு உண்மையான காரணம் தெரிந்திருந்தது. ஆனால் அதை ஒப்புக்கொள்கிற தைரியம் இல்லை.
யுரேனியம் என்றால் என்னவென்று தெரியுமா? அணுசக்திக்கு ஆதாரமான மிக முக்கிய எரிபொருள். மிகமிக விலை உயர்ந்த கனிமம். அதன் மூலக்கனிமம் மஞ்சள் கேக் என்று அறியப்படுகிறது. அது ஜாதுகுடாவின் மலைபகுதிகளுக்குள் நிரம்பி இருந்தது. யுரேனியம் மட்டுமல்ல இன்னும் பல அரிய கனிமங்கள் கொட்டிக்கிடந்தது. பழங்களும் காய்கறிகளும் உண்டு வாழும் ஆதிவாசிகளுக்கு அது எவ்விதத்திலும் உதவவில்லை. உண்மையில் அது அம்மக்களுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளைத்தான் கொண்டு வந்து சேர்த்தது. முதலில் பிரிட்டிஷ் காரர்கள் வந்து இடம்பெயர சொன்னார்கள். இடம்பெயர்ந்தனர். அவர்களுடைய நிலத்திலிருந்து தாமிரம் எடுக்கப்பட்டது. தாமிரத்தோடு வெளியேறிய யுரேனியத்தினை பிரிட்டிஷார் அறிந்திருக்கவில்லை. அந்த மக்களும்!. அந்த மஞ்சள் கேக் வெளியாக தொடங்கியபோதே அந்த இனத்தின் அழிவும் தொடங்கிவிட்டது. தாமிர சுரங்கத்தின் வழியாக செல்லும் கர்ப்பிணி பெண்களுடைய கருக்கலைந்தது. குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். அந்த மலையில் ஏதோ சாத்தான் அமர்ந்திருப்பதாய் எண்ணினர். அந்த சுரங்கம் மலைக்கு செல்லும் முக்கிய சாலையில் இருந்தது. மலையில்தான் அவர்களுடைய பிழைப்பு.
பிரிட்டிஷ் காரர்கள் அங்கிருந்து போன பின் தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாய் எண்ணினர் ஆதிவாசிகள். ஆனால் வல்லாதிக்கம் மீண்டும் இந்தியா என்கிற பெயரில் மீண்டு உள் நுழைந்தது. இந்த முறை யுரேனியத்தையே குறிவைத்தனர். யுரேனிய சுரங்கங்களில் போதிய பாதுகாப்பின்றி ஆதிவாசி இளைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யுரேனிய கதிரியக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஊருக்குள் சென்றனர். சென்ற இடமெல்லாம் பாதிப்பு.

வேதியியல் வேலைகள் பார்க்கும் போது வெளியேறும் கழிவு நீரை அகற்ற இடம் வேண்டுமே!. ஆதிவாசிகளே வேறெங்காவது போய் குடியேறுங்கள். விவசாய நிலங்களில் ஒரு அணை உருவாக்கப்பட்டது. அந்த அணையில் கதிரியக்க கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. மழைக்காலங்களில் அந்த நீர் மழைநீரோடு ஊருக்குள் புகுந்து விடும். மக்களுக்கு அப்போதும் தெரியாது யுரேனியம் கொல்லும் என்பது. கொன்றது. மேலே சொன்ன உடல்நலக்குறைபாடுகள் அதிகரித்தன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசிடம் முறையிட்டன.
பாபா அணுமின் ஆராய்ச்சி நிறுவனத்தின் அப்போதைய தலைவரோ ‘’உங்கள் மனைவியோடு கட்டியணைத்து படுத்திருக்கும் போது உங்கள் மனைவியின் உடலிலிருந்து உங்கள் உடலுக்கு பாயும் கதிரியக்கத்தைவிடவும் ஜாதுகுடா கழிவுநீர் குட்டையில் குறைவு, அதனால் அது மக்களுக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது’’ என்றார். அலட்சியம் கொடியது.

மக்கள் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. மக்கள் யுரேனிய சுரங்கத்தை மூடுமாறு அரசை வற்புறுத்தினர். ஆனால் அரசு வேறு திட்டம் வைத்திருந்தது. அது மற்றுமொரு கழிவுநீர் அணைக்கட்டை கிராமத்தின் இன்னொரு பகுதியில் கட்டத்துவங்கியது. நிலைமை மேலும் மோசமானது இப்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் பலர் போராடினர். வல்லாதிக்கம் சிரித்தது. 1998ல் புத்தர் மீண்டும் சிரித்தார். ஜாதுகுடா யுரேனியத்தில் அணுகுண்டு வெடித்தார். இந்திய தேசியம் தலைநிமிர்ந்தது. புத்தரின் தேசமான ஜாதுகுடாவிலோ புத்தரின் ஆன்மா கதறி அழுதது. போக்கிடமில்லாத அந்த மக்கள் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டேதான் போனது. அரசும் மக்களை காப்பாற்றுகிறேன் , அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டித்தருகிறேன் , சாலை அமைக்கிறேன் என்று ஏதேதோ செய்து பார்க்கிறது. அங்கே நிகழும் மரணங்களை யாராலும் மூடி மறைக்க இயலாது. இப்போதும் ஜாதுகுடாவின் யுரேனிய சுரங்கங்களுக்கு அருகில் குழந்தைகள் சுள்ளி பொறுக்கிக்கொண்டும் , சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அன்றாடம் யாராவது ஒருவர் காரணமின்றி இறந்தபடி இருக்கின்றனர்.
விஞ்ஞானிகள் இது குறித்து அணுசக்திக்கு சாதகமான புள்ளிவிபரங்களை அடுக்கலாம். புரட்சியாளர்கள் எதிரானவற்றை கொடுக்கலாம். பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி கடைநிலை மக்களே. என்ன செய்யப்போகிறோம் நாம் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் இது இந்தியாவில் அன்றாடம் நிகழும் சக பிரச்சனைகளின் ஒரு துளி. இதைப்போல இன்னும் எத்தனையோ அறியப்படாத நிகழ்வுகள். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு மக்கள் கூட்டம் தன் வாழ்விடத்தினை இழந்து அகதியாகவோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டோ கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கும். நமக்கு மிக அருகிலிருக்கும் கொடைக்கானலில் சமகாலத்தில் நிகழ்ந்த மெர்க்குரி தொழிற்சாலை பிரச்சனை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.
மேலே குறிப்பிட்ட ஜாதுகுடா பிரச்சனையை கூட புத்தர் அழுதுகொண்டிருக்கிறார் என்னும் டாகுமென்டரி பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அணுகுண்டு வெடித்ததால் உண்டாகும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஊடகங்கள் ஏனோ இது போன்ற நிகழ்வுகளில் வாய் மூடி மௌனமே சாதிக்கின்றன. நாமும் கூட அணுசக்தி முதலான நாட்டின் மிகமுக்கிய பிரச்சனைகளில் இதே கள்ள மௌனத்தையே தொடர்கிறோம்.
ஜாதுகுடா குறித்த டாகுமென்டரி பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கடுமையான மன உளைச்சல். மனமெங்கும் குற்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. உருத்தலாய் உணர்கிறேன். அந்த மக்களின் கவலைகளுக்கு பிரதானமான காரணகர்த்தா வேறு யாருமல்ல நான் மட்டுமே என்பதாய் உணர்கிறேன்.
இன்று நம்மால் மின்சாரமின்றி ஒரு விநாடி கூட இருக்க முடியாது. தினமும் இரண்டு மணிநேர கட்டாய மின்தடை குறித்து பெரிதாய் கவலைப்படுகிறோம். ஆனால் இங்கே நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிக்கு பின்னாலிருக்கும் சோகமும் நாம் அறியாதவை அல்ல. அதை கண்டும் காணதவர் போல கிடைத்த்தையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கிறோம். வேறு வழியில்லை. வசதிகளுக்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறோம். கணினிக்கு கூட கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வசதி எத்தனை உயிர்களை பலிகேட்டாலும் அதை வழங்கிவிட தயாராயிருக்கிறோம். இதையெல்லாம் மாற்றிவிட முடியாதா என எப்போதாவது ஏங்குகிறோம். ஆனால் பிரதனாமாக நம் குடும்பமும் வாழ்வியலும் அது சார்ந்த சமூகமும் இன்னபிறவும் இன்றியாமையாததாய் இருக்கிறது. இதன் மத்தியில் அப்பாவிகளின் மரண ஓலம் சாலையில் கடந்து செல்லும் வாகனத்தின் ஹாரன் ஒலிக்கு ஒப்பானவையாக கடந்து செல்கிறது.
போபால் விஷவாயு கசிவு குறித்து நம் அனைவருக்குமே தெரியும். யுனைடெட் கார்பைட் நிறுவனம் இதுவரைக்கும் கூட இந்தியாவை ஏமாற்றி சுதந்திரமாய் அலைவதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்று வரை அந்த மக்களுக்கு உரிய நஷ்ட ஈடோ , அந்த நிறுவனத்திற்கு தண்டனையோ கிடைத்த பாடில்லை. இதோ இப்போதும் கூட மீண்டும் இந்தியாவில் தன் பெயரை டவ் கெமிக்கல் என்று மாற்றம் செய்து கொண்டு மீண்டும் தொழிற்சாலை அமைக்கும் வேலையில் மும்முரமாய் இருக்கின்றனர் போபால் அரக்கர்கள். நம்மால் என்ன செய்து விட முடியும். ஜனவரியில் சென்னையில் நடந்த மார்கழி இசை கச்சேரிகளுக்கு முக்கிய ஸ்பான்சர் யார் தெரியுமா டவ் கெமிக்கல்ஸ். சரிகமபதநி என்று தொடை தட்டி பாட்டு கேட்பதை தவிர!

****************
அந்த டாகுமென்டரி திரைப்படம் - நன்றி - யூடியுப்
http://www.youtube.com/watch?v=XLvqkOWjs8A
http://www.youtube.com/watch?v=aCGw0UPgQ7w
http://www.youtube.com/watch?v=dVZY39jDnYg
http://www.youtube.com/watch?v=D1ejcq6dMHo
http://www.youtube.com/watch?v=i0tG_1mFn2I Download As PDF
Saturday, February 6, 2010
தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
by புருனோ Brun
தடுப்பூசி என்றில்லை. எந்த ஊசியும் ஆபத்து தான்.
-oOo-
- தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது)
- தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
ஊசி போட்டவுடன் ஒருவர் மரணமடைகிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்
- மருந்தில் தவறு
- ஊசி போடப்பட்ட முறையில் தவறு
- நபரின் தவறு - அது ஊசியுடன் சம்பந்தம் இல்லாத மரணம்
- அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
மருந்தில் தவறு
இது குறித்து அனைவருக்கும் தெரியும்.
- ஒன்று மருந்து கெட்டு போயிருக்க வேண்டும்
- அல்லது தவறான மருந்தை அந்த புட்டியில் அடைத்திருக்க வேண்டும்
-oOo-
ஊசி போடப்பட்ட முறையில் தவறு
- விஷங்கள் அனைத்தும் சரியான அளவில் மருந்தே
- மருந்துக்ள் அனைத்தும் தவறான அளவில் விஷமே
- அளவிற்கு மிஞ்சினால் அமுதும் விஷமாகும்
- எனவே ஒரு மருந்தை தவறான அளவில் ஊசிமூலம் செலுத்தினால் விஷமாகும். (இது செவிலியரின் கடமை)
- அதே போல் அளவு சரியாக இருந்தாலும் செலுத்தும் முறை சரியாக இருக்க வேண்டும் (இது குறித்து ஒரு சிறு விளக்கம் இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ளது) (இது செவிலியரின் கடமை)
- அதை விட முக்கியம் சரியான மருந்தை செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
- அதே போல் மருந்து காலவாதியாக வில்லை என்று பார்த்து விட்டு தான் செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
- மருந்து சரியான முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் (இது மருந்தாளுனரின் கடமை)
ஊசி போடப்படும் நபரின் இயல்பான மரணம் :
இந்த காரணம் உங்களில் பலருக்கு வித்தியாசமாக தெரியலாம். சிலருக்கு கோபம் ஏற்படுத்தலாம். ஆனாலும் இது கூட முக்கிய காரணம்.
- உதாரணமாக தமிழகத்தில் சுமார் 6,00,00,000 நபர்கள் இருக்கிறார்கள்.
- இதில் வருடந்தோரும் சுமார் 480000 மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 63250 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
- தினமும் 1315 நபர்கள் மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 173 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
- சென்னையில் மட்டும் தினமும் சுமார் 220 பேர் மரணமடைகிறார்கள்.
அதே போல் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கப்பட்ட நாளிலும் இவ்வாறுஇயல்பாக மரணமடையும் நான்கு 80 வயது நபர்களை காட்டி அது மாத்திரையினால் தான் மரணம் என்று பொய் பிரச்சாரம் நடந்தது.
சமீபத்தில் (அதாவது 2008 டிசம்பரில்) போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதால் குழந்தைகள் மரணம் என்று வதந்தி பரவியது நினைவிருக்கலாம். அது முற்றிலும் வதந்தியே
அப்படியென்றால் இந்த நோயால் இத்தனை பேர் மரணம் என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய்தானா
இல்லை. அப்படி ஒரேயடியாக ஒதுக்க முடியாது !!
ஆனால் இன்ப்ளுயென்சா H1N1னிலால் மரணம் ஏற்படலாம். நாளது தேதி வரையில் தமிழகத்தில் 8.5 லட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7518 பேருக்கு ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை செய்ததில் 205 பேருக்கும் இன்ப்ளுயென்சா H1N1(பன்றிக்காய்ச்சல்) இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 148 பேர் குணமடைந்துள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூவர் இறந்திருக்கிறார்கள்
சென்றவருடம் திருவள்ளூரில் தடுப்பூசி போட்டதால் மூன்று குழந்தைகள் இறந்ததாக வந்த செய்தி உண்மையே !!
ஏன் இப்படி இயல்பான மரணங்களுக்கு காரணம் கற்பிக்கப்படுகின்றன
இதற்கு காரணங்கள் பல
- ஊடகங்கள் : எதையாவது எழுதி பரபரப்பை உண்டாக்கும் சில பத்திரிகைகள். அவைகளை தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சில ஆங்கில செய்மதி தொலைகாட்சி நிறுவனங்கள்.
- அரசு வழங்கும் உதவித்தொகை : இவ்வாறு பொய் கூறினால் அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்பதால் தேவையில்லாமல் மரணத்திற்கு சம்பந்தமில்லாத அரசு நிறுவனத்தை இழுக்கிறார்கள். முதலில் சுகாதார துறை மட்டுமே இது போன்ற புரட்டுகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பிற துறைகளும் பாதிக்கப்படுவதை கண்டு நாங்கள் வியந்து போயிருக்கிறோம்(சமீபத்தில் தீ பிடித்ததால் தொலைக்காட்சி வெடித்ததா, தொலைக்காட்சி வெடித்ததால் தீ பிடித்ததா என்று ஐ.ஐ.டி பேராசிரியர்கள் முதல் அனைவரும் ஆராய்ச்சி செய்ததை அறிந்திருப்பீர்கள்)
அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
- இது குறித்து பலர் அறிந்திருக்க மாட்டீர்கள் (ignorance)
- அது போல் நான் சொல்லும் தகவல்களை நீங்கள் படித்த பின் நம்பாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது (non acceptance)
- ஏனென்றால் அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி என்பது மூலம் நாம் அனைவரும் மரணத்திற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதும் உணவு மூலம் / காற்றில் உள்ள மரகந்தம் மூலம் கூட நீங்கள் மரணமடைய வாய்ப்பு உள்ளது என்றால் அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது
- பிற ஊசிகளை விட தடுப்பூசிகள் போடும் போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம்
ஊசிபோட்ட ஒருவர் மரணமடைந்தாலே அது தவறான மருந்தின் மூலம் தான், அல்லது தவறாக ஊசி போட்டதில்தான் என்று தவறான நினைப்பு பரவி வருகிறது.
இதற்கு சில அரைவேற்காடு கட்டுரைகளுடன் / பேட்டிகளுடன் வரும் பத்திரிகைகள் முக்கிய காரணம்.
ஒவ்வாமை / அனாபிலாக்சிஸ் தான் காரனம் என்றால் தடுப்பூசியை நிறுத்த வேண்டியது தானே.
தடுப்பூசியினால் மட்டுமல்ல சாதாரண ஊசி, ஏன் சில வகை காய்கறிகள் கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். ஒவ்வாமையை முழுவதும் தடுக்க முடியாது.
மனித உடம்பு என்பது கருவியில் உருவாக்கப்படுவதில்லை.
- உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
- ஆனால் ஒருவரின் உடல் போல் மற்றொருவரின் உடல் இருக்காது.
- ஒரே தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் 20 தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரு பெட்டி 230 வால்ட் வரை வேலை செய்கிறது 276 வால்டில் வெடிக்கிறது என்றால் மீதி 19 தொலைக்காட்சி பெட்டிகளும் 276வது வால்டில்தான் வெடிக்கும்
- ஆனால் மனித உடல் அப்படி அல்ல.
- ஒவ்வொரு நபரின் எடை வேறு.
- ஒவ்வொரு நபரின் உயரம் வேறு.
- ஒவ்வொரு நபரின் இரத்த அழுத்தம் வேறு.
- ஒவ்வொரு நபரின் தோல் நிறம் வேறு.
- அதே போல் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களும் வேறு
- உங்களுக்கு பெனிசிலின் ஒவ்வாமை என்றால் அடுத்தவருக்கு செப்ட்ரான் உவ்வாமை. எனக்கு மெட்ரோடினசால் ஒவ்வாமையாக இருக்கலாம்.
- அதே போல் 99,999 நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு மருந்தை செலுத்தியவுடன் அது ஒத்துக்கொள்ளாமல் 1,00,000வது நபர் மரணமடையலாம்.
-oOo-
சரி, தடுப்பூசி போடாவிட்டால் குழந்தைகளுக்கு என்னத்தான் நோய் வரப்போகிறது
-oOo-
மேலே நீங்கள் பார்த்த படங்கள் அனைத்தும் தடுப்பூசி பரவலாக போடப்படுவதற்கு முன் இருந்த நிலைமை
-oOo-
தற்பொழுது
- பெரிய அம்மை (ஸ்மால் பாக்ஸ்) உலகில் அறவே கிடையாது
- தட்டம்மை (மீசீல்ஸ்) சில குழந்தைகளை பாதித்தாலும் அதனால் யாரும் குருடாவதில்லை
- போலியோவினால் ஒரு குழந்தை நடக்க முடியாமல் போனது 15 வருடங்களுக்கு முன்னர் தான்
- தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது). அது தவிர பிற குழந்தைகள் தான் மேலே இருக்கும் படங்களில் இருப்பது போல் பாதிக்கப்படுபவர்கள்
- தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
சில மூடநம்பிக்கைகள் - 2
- பசும்பாலை விட தாய்ப்பால் பாதுகாப்பானது, சுத்தமானது, சுகாதாரமானது, அதிகம் செலவில்லாதது, குழந்தைக்கு சரியான சூட்டில் கிடைக்கக்கூடியது
- குழந்தைக்கு தேவையான முழுமையான உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும்.கூடுதலாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை
- தாய்பாலில் கிருமிகளை எதிர்க்கவல்ல பல வேதியல் மற்றும் உயிர் வேதியல் பொருட்கள் உள்ளன. தாய்ப்பால் அளிக்கப்படும் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளை விட குறைவான அளவே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்கள். ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் அளித்தால் வயிற்றுப்போக்கு வராது
- எளிதாக சீரணமாகிறது - குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளால் கூட சீரனிக்க வல்ல உணவு தாய்ப்பாலே
- தாய்க்கும் சேய்க்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்துகிறது
- குழந்தையின் வாய், உதடு, தாடை ஆகிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அளிப்பது முக்கியம்
- குழந்தை அதிக எடை பெறுவதை தாய்ப்பால் தடுக்க வல்லது
- குழந்தை எடை குறைந்து சவலை குழந்தையாவதையும் தாய்ப்பால் தடுக்க வல்லது
- குழந்தையில் இரத்ததில் கால்சியம், மக்னீசியம் போன்ற தாது பொருட்கள் சரியான அளவில் இருப்பதற்கு தாய்ப்பால் உதவுகிறது
- குடும்ப கட்டுப்பாட்டில் உதவுகிறது
450 முதல் 600 மிலி வரை சரியான அளவு என்று கருதப்படுகிறது
எத்தனை மாதங்கள் வரை
18 மாதங்கள் வரை அளிக்கலாம்
முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே போதும்
சிசேரியன் செய்தாலும் அளிக்கலாமா
கீழே பார்க்கவும்
இங்கு பார்க்கவும்
பால் குறைவாக வந்தால் என்ன செய்ய வேண்டும்
தாய் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்
தாய்ப்பால் அளவை அதிகரிக்க முடியுமா
தாய் போதிய அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம், தாய் தினமும் 4 முதல் 6 கப் பசும்பால அருந்துவதன் மூலம் குழந்தைக்கு போதிய அளவு பால் கிடைக்கும்
6 மாதங்களுக்கு பிறகு என்ன அளிக்க வேண்டும்
6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலை நிறுத்த கூடாது. தாய்ப்பாலுடன் கூடவே பசும்பாலை வழங்க வேண்டும். இப்படியாக படிப்படியாக ஒவ்வொரு பொருட்களாக கூட்டிக்கொண்டு வந்து படிப்படியாக 12 முதல் 18 மாதங்கள் வரை தாய்ப்பாலை மெதுவாக நிறுத்தலாம்
வேலைக்கு போகும் பெண்கள் ??
காலை, மாலை, இரவு தாய்ப்பால் அளிக்கலாம்
பிற நேரங்களின் பாலை பீய்ச்சி எடுத்து (6 மணி நேரம் வரை) குளிர்சாதன கருவியில் (பிரிட்ஜ்) வைத்து குழந்தைக்கு அளிக்கலாம்
லாக்டோஜன் போன்ற பொருட்கள்
கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். “ காசுக்கு வந்த கேடு” சொல்வார்களே.. அதற்கு ஏற்ற உதாரணம் இது போன்ற பொருட்கள் தான். காசு போனால் கூட பரவாயில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வர முக்கிய காரணமே இது போன்ற செயற்கை உணவுகள் தான்.
பிற கேள்விகள் / சந்தேகங்கள் ???
மறுமொழியில் கேட்டால் பதிலளிக்கத்தயார்
சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்
மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :
- இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
- தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது.
- அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
- தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
- தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
- இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
- அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்.
- அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
- எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
- எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
- ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது
- அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்” பலர் இருக்கிறார்கள்
- சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். -
- அதெல்லாம் அந்த காலம்.
- இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும்.
- அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
- அப்படியெல்லாம் இல்லை.
- இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
- தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
- சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
- தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
- சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
- சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
- அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்
- பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது.
- இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
- வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent
- எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
- இதில் பொது விதி கிடையாது
- இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
- இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை
சில மூடநம்பிக்கைகள் -1
மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :
- இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
- தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது.
- அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
- தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
- தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
- இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
- அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்.
- அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
- எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
- எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
- ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது
- அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்” பலர் இருக்கிறார்கள்
- சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். -
- அதெல்லாம் அந்த காலம்.
- இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும்.
- அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
- அப்படியெல்லாம் இல்லை.
- இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
- தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
- சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
- தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
- சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
- சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
- அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்
- பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது.
- இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
- வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent
- எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
- இதில் பொது விதி கிடையாது
- இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
- இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை
Tuesday, February 2, 2010
மரபணு மாற்றிய கத்தரிக்காய்
நாடு முழுவதும் இன்று பெரும் உரையாடல் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய விவசாய துறை மந்திரி ஜெயராமுக்கு விவசாயிகள் போகும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவாகி உள்ளது.
04/02/2010 வியாழன் அன்று மாலை 5 மணிக்கு மரபணு மாற்றிய கத்தரிக்காய் பற்றி அறிய மற்றும் கலந்துரையாட அன்புடன் தங்களை அழைக்கிறோம் . .
இடம் பாரதி படிப்பகம், வா. உ. சிதம்பரம் சாலை, மேற்கு தாம்பரம், சென்னை - ௫௩
உடன் உரையாடுபவர் பேராசிரியர் சந்திரா.
தொடர்புக்கு 9840511638, 9444387494 Download As PDF
சோளம் சாப்பிடலையோ சோளம்
அந்த ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது. முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்.
.... ஒரேயொரு ஏக்கர் நிலத்தை.. அதே Iowa மாநிலத்தில் குத்தகைக்கு எடுத்து... அதில் சோளம் பயிரிட்டு... அந்த சோளம்... எங்கிருந்து விதையாக வருதுன்னு தொடங்கி, அது எங்கெல்லாம்... போகுது... எப்படியெல்லாம் மாறுதுன்னு ஒரு வருடமாக.. அந்த சோளத்தின் பின்னாடியே சுத்துவாங்க. டாகுமெண்ட்ரியின் பெயர் King Corn. வாய்ப்பு கிடைச்சா.. இதையும் பாருங்க.
மானியம் கிடைக்குதேன்னு (இதிலேயே நேரடி,மறைமுகம்னு.. ஏகப்பட்டது) அத்தனை விவசாயிகளும்... தேவைக்கு அதிகமான அளவில் சோளத்தைப் பயிரிட ஆரம்பிக்க, அந்த சோளம்... பலப் பல வழிகளில்.. நம் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கு.
சோளம் ரொம்ப சீப்-ன்னு தெரியும். அது எத்தனால் தயாரிக்கவும், கொஞ்சமா பெட்ரோலில் கலக்கறாங்கன்னும் தெரியும். அது இல்லாமல்... அந்த சோளம்.. எத்தனை இடத்தில் பரவியிருக்குன்னு நினைக்கறீங்க? கண்டிப்பா கணக்கெடுக்க முடியாது. இதெல்லாம் இல்லாமல்... சோளத்தின்.. இன்னொரு சிறப்பு.......
......அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை!!! கரும்பை விட.. மிக.. மிக.. மிக.. மலிவான சர்க்கரை. நாம குடிக்கும் கோக், பெப்ஸி, க்ரேப் சோடா.. போடா... வாடா.... அத்தனையிலும் இருப்பது... சோளம் மட்டும்தான்!!!
மெக்டொனாட்ஸில் ஒரு மீல் வாங்கிட்டு உட்காருறீங்கன்னா...., பர்கர், சோடா... அவ்வளவு ஏன்.... உருளைக் கிழங்கில் செஞ்ச ஃப்ரென்ச் ஃப்ரைஸில் கூட சோளம் கலந்திருக்கு. மிகக் குறைவான விலையில், நமக்கு சர்க்கரை வியாதியை தந்துகிட்டு இருக்கு. இது சோளத்தோட குறையில்லை. கம்மி காசில் அதிகம் சம்பாதிக்க.. இந்த உணவுக் கம்பெனிகள் கண்டுபிடித்த பொருள்.
இவர்களோட இந்த ‘சீப்’ தேவைக்காக... இவர்கள் அரசாங்கத்தை தூண்ட..., அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆசை காட்ட, எல்லோரும்.. இந்த சோளத்தை பயிரிட ஆரம்பித்து... இப்ப தேவைக்கு அதிகம்னு சொல்லி.. இதே கம்பெனிகள்.. மலிவான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து.. அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வது. அது அரசாங்கத்துக்கு விற்கப்பட்டாலும்.. இவங்களுக்குத்தான் திரும்ப விற்கப் போறாங்க. நட்டத்தில் விற்ற விவசாயிக்கு... அரசாங்கம் தரும் மானியம் மட்டும்தான் அந்த மொத்த வருட உழைப்புக்கு கூலி. அந்த மானியம்... வரி கட்டும் மக்களிடம் இருந்து!!! எல்லோருக்கும் நாமம்!!! உணவுக் கம்பெனிகளுக்கு மட்டும் சோளம்!!!
கடந்த முப்பது வருடங்களுக்குள்... அமெரிக்காவில் பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும்.. அவர்களின் ஜீனே மாறிப்போய்... உடம்பு முழுக்க ‘சோளம்’ மட்டுமே ஓடிக்கிட்டு இருக்கு. மாடுகளுக்கு புல் போட்டா...., நாம.. பர்கரை $1 டாலருக்கு கடிக்க முடியாது. அதேதான்.. கோழி.. மீன் -ன்னு.. அத்தனை ‘உணவு’ விலங்குகளுக்கும்... கிடைக்கும் ஒரே சாப்பாடு.. ‘சோளம்.. சோளம்.. சோளம்’. மீனெல்லாம் சோளம் சாப்பிடுமா???
ஒரு சேர்ல.... ஒத்தைக் காலில்... ஒரு யானையையே நிற்க வைக்க பழக்கும் மனுசனுக்கு.. இந்த மீனை.. சோளம் திங்க வைப்பதா பெரிசு?! மாடு, கோழின்னு.. அத்தனையும்.. சோளம் சாப்பிட்டு.. சாப்பிட்டு.... கொஞ்ச நாட்களுக்குள்ளயே உடம்பு பெருக்க (நாமக்கல்லுக்கு வாங்க... அங்க கோழி வளர்க்கறதைப் பார்த்தா... சைவமாகிடுவீங்க), அந்த மாடு-கோழிகள்தான்... நமக்கு... லஞ்ச்!! அப்ப நாம சாப்பிடுறது கோழியை இல்லை. சோளத்தை!! நீங்க வெஜிடேரியந்தான்!!
King Corn & Food, Inc இரண்டுப் படங்களிலும்.. ஒரே காட்சி காட்டப் படும். ஆனால்
அந்த நாடு முழுக்க... ஒரே மாதிரியான ருசி கிடைப்பதற்காக..., இது மாதிரியான கம்பெனிகளின் டேஸ்டிற்கு ஏற்ப.. ஜீன்கள் மாற்றப் பட்ட.. கோழி-மாடு-பன்றிகளை மட்டுமே 99% எல்லோரும் வளர்க்கிறாங்க. மொத்த கொள்ளளவும்... இவர்களை நம்பியிருப்பதால்.. இந்த கம்பெனிகள் சொல்வது மட்டுமே சட்டம். எதிர்த்தால்.. காண்ட்ராக்ட் கட்!! அடுத்த வருடம்.. அந்த விவசாயிக் குடும்பம்.. நடுத்தெருவில்!!! இது எதுவும் தெரியாமல்.. நாமும் நம் குழந்தைகளும்... மெக்டொனாட்ஸில்.. kids zone -ல் சந்தோசமா பெப்ஸி குடிச்சி, பர்கர் கடிச்சிகிட்டு இருக்கோம்.
அமெரிக்க உணவின் தரக் கட்டுப்பாட்டை... கண்காணிக்கும் FDA (Food and Drug Administration)எல்லாம் எப்பவோ கண்ணை மூடியாச்சி. ஏன்னா... எந்த அரசாங்கம்.. ஆட்சிக்கு வந்தாலும்.. அந்தக் கட்சியை சார்ந்த..., இந்த உணவுக் கம்பெனிகளின்.. நெருங்கிய ஆட்கள் FDA -ஐ கண்ட்ரோல் செய்யுறாங்க. ஸோ... சாப்பிடும்.. உணவில்.. என்ன கலந்திருக்கு..., எத்தனை கலோரி சாப்பிடுறோம், இந்த உணவு எங்கே.. எப்படி தயாரிக்கப் பட்டது-ன்னு எந்த விவரமும் இல்லாமல்... இந்த ‘குப்பை உணவை’ மென்னுகிட்டு இருக்கோம்.
2006 வருஷம், இன்னொரு 9/11 நடந்த மாதிரியும், அந்த்ராக்ஸ் கிருமிகள் பரவின ரேஞ்சிற்கும் அமெரிக்கா முழுக்க ஒரே பீதி!!! 50 ஏக்கர் நிலத்தில்... கலிஃபோர்னியா மாநிலத்தின் ஏதோவொரு மூலையில் வளர்ந்திருந்த.........., நம்ம பாப்பாய்ஸ் தாத்தா சாப்பிடுவாரே.. அந்த ஸ்பினச்கீரையில்.., எதோ ஒரு கிருமி இருக்க, இருப்பத்தாறு மாநிலத்தில் இப்ப இந்த கிருமி பரவிடுச்சி. மூணு பேர் அல்ரெடி காலி. சிறுநீரகப் பிரச்சனை.. அது.. இதுன்னு.. அல்லோகலம். இதுக்கெல்லாம் காரணம்...?
Escherichia Coli அல்லது சுருக்கமா E Coli. உணவை விஷமாக மாற்றும் ஒரு வகையான பாக்டீரியா. பெரும்பாலும்... ‘கழுவாமல்’ சாப்பிடும் எந்த உணவுப் பொருள் மேலயும் இது இருக்குமாம். சைவம்... அசைவம்னு எல்லாம் எந்த பாகுபாடும் கிடையாது.
ஒழுங்கான.. இடத்தில்.. வளரும் ஆடு-மாடு-கோழிகளே... சீக்கு பிடிச்சித் திரியும் போது... நகரக் கூட வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக சாக ரெடியாக இருக்கும்.. இந்த மெக்டொனாட்ஸ் கோழிகள் மட்டும் என்ன பணக்கார களையோட சுத்தப் போகுது??
ஒரு ஹிடன் கேமராவில்..., இப்படி... நோயில் இறந்தக் கோழிகளைக் கூட... இந்த சுகாதார உணவுக் கம்பெனிகள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக, ஏற்கனவே.. ஒரு மாட்டின் வயிற்றில் ஓட்டை போட்டு... அதிலிருந்து... இவர்கள் வெளியே எடுத்துக் காட்டும்.. அழுக்குகள் எல்லாம் பார்த்து.. குமட்டிக் கொண்டு வரும்போது..., இந்த E-coli மட்டும் என்ன சும்மாயிருக்குமா?? அதுவும்.. ஜம்முன்னு... இந்த அத்தனை உணவுகள் மேலேயும்.. ஜம்முன்னு வளர்ந்துகிட்டுதான் இருக்கு.
இப்படி E-coli பாக்டீரியா இருந்த பர்கர்களை சாப்பிட்ட, ஒரு மூணு வயசுப் பையன் இரண்டே வாரத்தில்.. சிறுநீரகப் பிரச்சனையில் இறக்க, பையனை பறிகொடுத்த அம்மாவால்... இந்த பண்ணாடைகளை ஒன்னும் புடுங்க முடியலை. இது மாதிரி குழந்தைகளை இழந்த நிறைய பேர் இன்னும் போராடிகிட்டே இருக்காங்க. ஆனாலும்.. அர்னால்ட் மாதிரியான அரை மெண்டல் அரசியல்வாதிகள் எல்லோரும்...
... இந்த கார்ப்பொரேஷன்களை காப்பாற்றுவதற்கு மட்டும்தான்.. தங்களோட.. ‘வீட்டோ’ பவரை உபயோகிக்கிறாங்க. Food, Inc படம் ஆறு வருடமாக எடுக்கப் பட்ட, வெறும் ஒன்னரை மணி நேர டாகுமெண்ட்ரி. இதன் இயக்குனர்/தயாரிப்பாளர் ராபர்ட் கென்னர் மாதிரி.. ஆர்வலர்கள் எல்லாம்.......
..... குறைந்த பட்சம்.. நாம் சாப்பிடும் உணவில்.. நாம் என்ன சாப்பிட்டுகிட்டு இருக்கோம்னு ஒரு லேபிள் அடிச்சி ஒட்டுங்கடா-ன்னு கோர்ட்டில் வாதாடி... வெற்றி பெற்றால்... அந்த அர்னால்ட் கூமுட்டை.. அதையும்.. தன்னோட வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி.. கேன்ஸல் பண்ணிடுச்சாம்.
மைக்ரோஸாஃப்ட் கம்பெனி எப்பவும்... தன்னோட சாஃப்ட்வேர்களின்... பிரச்சனைகளை.. ‘ஆணிவேரில்’ இருந்து பார்க்காது. ஒரு bug-ஆ?? ஓகே.. இந்தா patch!! நூறு bugs-ஆ? இந்தா சர்வீஸ் பேக்-ன்னு... ‘ஒட்டு போட்டே’ உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அதே விசயத்தைத்தான்.. இந்த Food கம்பெனிகளும் பண்ணுறாங்க.
இறைச்சிக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை Ecoli மாதிரி பாக்ட்ரீயாக்கள் வரவிடாமல் ஆரோக்கியமா வளர்க்கறதை விட்டுட்டு..., அந்த Ecoli பாக்டீரியாக்களை கொல்ல..., அந்த இறைச்சி மேல்.. இன்னொரு பூச்சி மருந்தை தெளிச்சி... சூப்பர் மார்க்கெட்களுக்கும், நம்ம பர்கருக்கும் அனுப்பறாங்க.
நெசமா.. சொல்லுங்க.... நீங்க பர்கரா சாப்பிடுறீங்க??????????
இது பேசி முடியற கதையில்லை. சொல்லி திருந்தப் போறதுமில்லை. முடிஞ்சா படம் பாருங்க. அதுக்கப்புறமும்.. அந்த கருமத்தை சாப்பிடத்தான் போறீங்கன்னா... தாராளமா குழி வெட்டிக்கங்க.
அமெரிக்காவில்... இந்த KFC, McDonald's, Burger King -ன்னு அத்தனை ரெஸ்டாரண்ட்களையும்..குப்பை உணவகங்கள் (JUNK FOOD ரேச்டுரன்ட்) -ன்னுதான் கூப்பிடுவாங்க. டைனோசர் குட்டி போட்ட சைஸில்.. இருக்கும் ஆட்கள்தான்... இந்த உணவுகளை சாப்பிடுறவங்க. இங்கே.. கொஞ்சம் கொஞ்சமா.. அவேர்னஸ் வந்து... மக்கள் இதை ஒதுக்கிட்டு... ‘உழவர் சந்தை’களில் போய், காசு அதிகமானாலும்.. அங்க வாங்கி சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.
இந்தப் பதிவையோ, படத்தையோ பார்த்துட்டு... ஒரு பத்து பேர் சாப்பிடுவதை நிறுத்தினா கூடப் போதும். இதை நிறுத்திட்டு... கொஞ்ச நாள் கழிச்சிப் பாருங்க. உங்களுக்கே... உங்க உடம்பிலும், மனசிலும் மாற்றம் தெரியும். அப்படி தெரியுதுன்னு நீங்க நினைச்சாலே.. போதும்!! இந்த கம்பெனிகள்.. போடும் எத்தனை கேஸை வேணும்னாலும்... சந்தோஷமா எதிர் நோக்கலாம்!!!
இங்கிருந்து துரத்தும் போது.... புகலிடம் வேணுமில்லையா??? அதுதான்.. வந்தாரை வாழ வைக்கும்... நம் நாடுகளில்.. இவங்க கடையை விரிச்சிட்டாங்க. வேற மாதிரி நாகரிகமாசொல்லணும்னா.... அமெரிக்கா காரன்... ‘க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்தூ’-ன்னு துப்பினதைத்தான்..., இப்ப நம்மூர் மக்கள் ப்ரெஸ்டீஜா நினைச்சி... ருசிச்சி... சாப்பிடுறாங்க.... அடுத்த முறை அங்கே சாப்பிடும் போது... டேஸ்ட் எப்படி இருந்ததுன்னு மறக்காமல் சொல்லுங்க!!
Friday, January 29, 2010
நீரின் முரண் விரிவாக்கம் - அறிவியல்
பொதுவாக எந்த திரவத்தை எடுத்துக்கொண்டாலும் அதைக் குளிரவைத்துக்கொண்டே இருந்தால், அது திடப் பொருளாகிவிடும். நீரைக் குளிரவைக்க, அதன் வெப்பம் 0 டிகிரி செண்டிகிரேடை அடையும்போது, அது பனிக்கட்டியாகிறது.
பொதுவாக ஒரு பொருள் திரவ நிலையிலிருந்து திட நிலைக்குச் செல்லும்போது அதன் அடர்த்தி அதிகமாகும். ஆனால், ஐஸ்கட்டியின் அடர்த்தி, நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக உள்ளது. இதன் விளைவாக, ஐஸ்பாறைகள் நீரின் மேல் மிதக்கின்றன. அதாவது 20 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும் ஒரு லிட்டர் நீரை எடுத்து அதனை ஐஸ் ஆக்கினால், அது ஒரு லிட்டரைவிட அதிகமாக இருக்கும்.
கடும் குளிர் பிரதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீர் குளிரக் குளிர முழு ஆறுகள் ஐஸ் கட்டியானால், அதில் நீந்தும் மீன்களின் கதி என்ன? உறைந்து செத்துவிடும் அல்லவா? ஆனால், நீர் அதன் குறிப்பிட்ட ஒரு பண்பால், இந்த மீன்களைக் காப்பாற்றுகிறது.
20 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும் ஒரு லிட்டர் நீரை எடுத்துக்கொண்டு அதைக் குளிரவைத்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளளவில் குறைந்துகொண்டே போகும். அதாவது அதன் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே போகும். சுமார் 4 டிகிரி செண்டிகிரேடை அடையும்போது, அதன் அடர்த்தி மிக அதிகமாக இருக்கும். மேலும் குளிரவைத்தால், நீர் இப்போது நாம் எதிர்பார்த்ததிலிருந்து மாறாக, திடீரென விரிவடைய ஆரம்பிக்கிறது. 4 டிகிரியிலிருந்து 0 டிகிரி ஆகுவரை விரிந்துகொண்டே போகிறது. ஐஸ் கட்டி ஆகும்போது மேலும் அதிகமாக விரிவடைகிறது.
அடர்த்தி அதிகமான நீர், அதன் கனம் காரணமாக கீழே இருக்கும். இதனால் எல்லா ஆற்றிலும் குளத்திலும், அடிமட்டத்தில் இருப்பது 4 டிகிரி செண்டிகிரேட் உள்ள நீர்தான்.
இதன் விளைவு என்ன? கடும் குளிர்ப் பிரதேசமாக இருந்தாலும், வெளியே காற்றில், -20 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் இருந்தாலும், ஆற்றின் அடிமட்டத்தில் 4 டிகிரி செண்டிகிரேட் நீர் திரவமாக ஓடும். மீன்கள் இந்தப் பகுதியில் பதுங்கிக்கொள்ளலாம்.
நீரின் இந்தப் பண்பை, Anamolous Expansion of Water (நீரின் முரண் விரிவாக்கம்) என்று அழைக்கிறார்கள். அதாவது, எதிர்பார்க்காத, விளக்கமுடியாத ஒரு பண்பு.
இந்தப் பண்பு மட்டும் இல்லாவிட்டால் குளிர் பிரதேசங்களில் மீன்கள் தொடர்ந்து தழைக்கமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும்.
Thanks to bseshadri
Download As PDF