Your Need Our | Advertisement

Your Ad Here

Welcome

Dear Friend!

I welcome the minds who have anything to share their views, ideas, missions, vision, goal, policies, and communal activities all round in education in India and Tamilnadu.Use this platform to have certain key note in the broader area of Education. You can post the methods and materials can be used in the Teaching and Learning process

Friday, January 29, 2010

நீரின் முரண் விரிவாக்கம் - அறிவியல்

பொதுவாக எந்த திரவத்தை எடுத்துக்கொண்டாலும் அதைக் குளிரவைத்துக்கொண்டே இருந்தால், அது திடப் பொருளாகிவிடும். நீரைக் குளிரவைக்க, அதன் வெப்பம் 0 டிகிரி செண்டிகிரேடை அடையும்போது, அது பனிக்கட்டியாகிறது.

பொதுவாக ஒரு பொருள் திரவ நிலையிலிருந்து திட நிலைக்குச் செல்லும்போது அதன் அடர்த்தி அதிகமாகும். ஆனால், ஐஸ்கட்டியின் அடர்த்தி, நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக உள்ளது. இதன் விளைவாக, ஐஸ்பாறைகள் நீரின் மேல் மிதக்கின்றன. அதாவது 20 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும் ஒரு லிட்டர் நீரை எடுத்து அதனை ஐஸ் ஆக்கினால், அது ஒரு லிட்டரைவிட அதிகமாக இருக்கும்.

கடும் குளிர் பிரதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீர் குளிரக் குளிர முழு ஆறுகள் ஐஸ் கட்டியானால், அதில் நீந்தும் மீன்களின் கதி என்ன? உறைந்து செத்துவிடும் அல்லவா? ஆனால், நீர் அதன் குறிப்பிட்ட ஒரு பண்பால், இந்த மீன்களைக் காப்பாற்றுகிறது.

20 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும் ஒரு லிட்டர் நீரை எடுத்துக்கொண்டு அதைக் குளிரவைத்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளளவில் குறைந்துகொண்டே போகும். அதாவது அதன் அடர்த்தி அதிகரித்துக்கொண்டே போகும். சுமார் 4 டிகிரி செண்டிகிரேடை அடையும்போது, அதன் அடர்த்தி மிக அதிகமாக இருக்கும். மேலும் குளிரவைத்தால், நீர் இப்போது நாம் எதிர்பார்த்ததிலிருந்து மாறாக, திடீரென விரிவடைய ஆரம்பிக்கிறது. 4 டிகிரியிலிருந்து 0 டிகிரி ஆகுவரை விரிந்துகொண்டே போகிறது. ஐஸ் கட்டி ஆகும்போது மேலும் அதிகமாக விரிவடைகிறது.

அடர்த்தி அதிகமான நீர், அதன் கனம் காரணமாக கீழே இருக்கும். இதனால் எல்லா ஆற்றிலும் குளத்திலும், அடிமட்டத்தில் இருப்பது 4 டிகிரி செண்டிகிரேட் உள்ள நீர்தான்.

இதன் விளைவு என்ன? கடும் குளிர்ப் பிரதேசமாக இருந்தாலும், வெளியே காற்றில், -20 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் இருந்தாலும், ஆற்றின் அடிமட்டத்தில் 4 டிகிரி செண்டிகிரேட் நீர் திரவமாக ஓடும். மீன்கள் இந்தப் பகுதியில் பதுங்கிக்கொள்ளலாம்.

நீரின் இந்தப் பண்பை, Anamolous Expansion of Water (நீரின் முரண் விரிவாக்கம்) என்று அழைக்கிறார்கள். அதாவது, எதிர்பார்க்காத, விளக்கமுடியாத ஒரு பண்பு.

இந்தப் பண்பு மட்டும் இல்லாவிட்டால் குளிர் பிரதேசங்களில் மீன்கள் தொடர்ந்து தழைக்கமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும்.

Thanks to bseshadri

Download As PDF

No comments:

Post a Comment